ரூ.21 லட்சம் மோசடி! விஜய் தந்தை எஸ்ஏசி மீது கனடா தமிழர் பகீர் புகார்! கமிஷ்னர் ஆபிஸ் பஞ்சாயத்து!

தளபதி விஜயின் தந்தையான எஸ் ஏ. சந்திரசேகர் மீது கனடா வாழ் தமிழர் ஒருவர் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்.


கனடா வாழ் தமிழர் ஒருவர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் டிராபிக் ராமசாமி என்ற திரைப்படத்திற்காக 21 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். எதிர்பார்த்த விதமாக இந்த திரைப்படம் அமையாததால் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார்.

பணத்தை திரும்ப கேட்டபோது அதை தர மறுத்துள்ளார் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி. பணத்தை திருப்பித் தர மறுத்தது மட்டுமல்லாமல் எங்களைப் பார்த்தால் அரசாங்கமே அலறும் என்றும் விஜய்யின் தந்தை கனடா வாழ் தமிழரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கனடா வாழ் இல்லப்பா தமிழர் போலீசிடம் சந்திரசேகர் பற்றி புகார் அளித்துள்ளார். மேலும் அவரது 21 லட்சம் பணத்தை பெற்றுத் தருமாறும் கூறியுள்ளார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.