30 ஆயிரம் அடி உயரம்..! பறந்து கொண்டிருந்த விமானம்! வலியில் துடித்த கர்ப்பிணி! நடுவானில் பிறந்த குழந்தை! பிறகு?

தோஹாவிலிருந்து இருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் நடுவானில் குழந்தை பெற்ற சம்பவம் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.


பொதுவாகவே விமான நிறுவனங்கள் கர்ப்பிணிப் பெண்களை 36 வாரங்களுக்குப் பிறகு 4 மணி நேரத்திற்கு மேல் பறக்க அனுமதிப்பதில்லை. அந்த வகையில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனங்களும் கர்ப்பிணிப் பெண்களை குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்பு விமானத்தில் செல்வதற்கு அனுமதி வழங்குவதில்லை. இருப்பினும் தற்போது பெண் ஒருவர் நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தோஹாவிலிருந்து பாங்காக் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணித்தார்.  23 வயதாகும் அந்த கர்ப்பிணிப் பெண் பாங்காக் செல்வதற்காக அந்த விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.கத்தார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான QR-830 என்ற விமானத்தில் அவர் சென்றிருக்கிறார்.

 

 அப்போது அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக கூறி விமானத்தை தரையிறக்க விமானி அதிகாரிகளிடம் ஒப்புதல் கேட்டிருக்கிறார். ஒப்புதல் கிடைக்கும் முன்பே அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடுவானில் விமானத்திலேயே குழந்தை பிறந்துள்ளது பின்பு அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்தமையால் விமானி அவசர அவசரமாக பத்திரமாக விமானத்தை கொல்கத்தா விமான நிலையத்தில் தரை இறக்கினார்.

பின்னர் தாயையும் சேயையும் அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடுவானில் பெண் ஒருவர் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.