விடிய விடிய கணவனுடன் சண்டை..! மறு நாள் அதையும் காசாக்கிட்டாங்க அந்த சேனல்..! தாடி பாலாஜி மனைவி நித்யா வெளியிட்ட சீக்ரெட்!

டிவி ரியாலிட்டி ஷோக்களில் யாரை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என முன்கூட்டியே முடிவெடுத்துவிடுவதாக அதில் கலந்து கொண்ட சிலர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.


ஆரம்பத்தில் அறிவு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி அதில் வெற்றியாளர்களை கவுரவித்த வந்த ரியாலிட்டி ஷோக்கள் தற்போது வேறு பாதையை நோக்கி செல்வதால் நாள்தோறும் புதுப்புது சர்ச்சைகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இதில் கலந்து கொண்ட சிலர் இந்த ரியாலிட்டி ஷோக்களில் யார் ஜெயிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவெடுத்துவிடுகிறார்கள். அவர்கள் ஏற்கனவே எழுதிவைத்த ஸ்க்ரிப்ட் படிதான் நடப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இதுமட்டுமின்றி ரியாலிட்டி ஷோவில் அசாம்பாவிதம் நடந்துவிட்டால் பாதிக்கப்பட்வர்களிடம்  கவனம் செல்வதில்லை. அதில் இருந்து ஆடியன்சுக்கு எந்தமாதிரியான தகவல்கள் பகிரலாம் என்றுதான் யோசிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இதுகுறித்து தாடி பாலாஜியின் மனைவி நித்யா பேசியபோது, நான் 2 முறை இந்த ஷோவில் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் ரியாலிட்டி ஷோவுக்கான அர்த்தம் தெரியவில்லை.

முதலில் ஒரு நடன நிகழ்ச்சியில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு நாள் முழுவதும் அவருடன் சண்டை போட்டேன். மறுநாள் அந்த நிகழ்ச்சியில் என்னையும் அறியாமல் சில விஷயங்களைக் கேமரா முன்னாடியே பேசிட்டேன். அந்த தொலைக்காட்சி நினைத்திருந்தால் எங்கள் பிரைவசியை கருதி ஒளிபரப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை அப்படியே ப்ரோமோவில் காட்டி குடும்ப பிரச்சனையை உலகிற்கு காட்டி விட்டார்கள் என்றார் நித்யா. 

படப்பிடிப்பு தளத்தில் நடக்கு சண்டையை ஒளிபரப்புவதை காட்டலாம். ஆனால் அங்கு நடக்கும் விபத்தை கூட அப்படியே ஒளிபரப்புகிறார்கள் என்கிறார் ஒரு பிரபல நடிகர். என் மனைவியுடன் நடந்த ஷோவில் ஒரு டாஸ்க் வைத்தார்கள். அப்போது விபத்து நடந்துடுச்சு. ரெண்டு பேருக்குமே பலத்த காயம். ஆனால் முதலுதவி செய்ய ஆட்கள் வரவில்லை. ஷோ பிரபலம் ஆக எங்கள் பக்கம் கேமராவை திருப்பி போகஸ் செய்தார்கள். பின்னர் நாங்கள் உயிரோடு இருக்க வேண்டாமா என சத்தம் போட்டபிறகு மருத்துவ உதவி செய்தார்கள் என்கிறார்