பெற்ற தாயை ஆசிரமத்திற்கு அனுப்பிவிட்டு உல்லாச வாழ்க்கை! டிவி நடிகை தேவி கிருபா மீது திடுக் புகார்!

டிவி பிரபலம் தேவி கிருபா, தனது தாயை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டுள்ளதாக, சர்ச்சை கிளம்பியுள்ளது.


சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம், தென்றல் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தேவி கிருபா. தற்போது, வசந்த் டிவி உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவரது தாயார் ஸ்வாதி கிரிஜா, சென்னை மதுரவாயல் போலீசில் திடீரென ஒரு வாக்குமூலத்தை எழுதிக் கொடுத்துள்ளார். 

அதில், ''எனக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே உள்ளார். நான் பெற்றெடுத்த தேவி கிருபா இறந்துவிட்டதாக,  நான் நினைத்துக் கொள்கிறேன். இனி அவள் எனக்கு மகள் இல்லை,'' என்று ஸ்வாதி கிரிஜா எழுதியுள்ளார். இதுபற்றி வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள ஸ்வாதி கிரிஜா, ''14  ஆண்டுகளுக்கும் மேலாக தேவி கிருபா ஊடகத்துறையில் வளர்ச்சியடைய நான் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன்.

இரவு, பகல் பாராமல் அவளுக்கு உதவியாக இருந்தேன். ஆனால், திடீரென என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டுட்டா. சாலையோர தர்கா, கோயில் போன்றவற்றில் படுத்து உறங்கும் நிலைக்கு என்னை ஆளாக்கிட்டா. கடந்த 8 மாதங்களாக, ஆசிரமம் ஒன்றில் தங்கியுள்ளேன். எனது செலவை மகன் கோகுல் மட்டும்தான் பார்த்துகிறான். 65 வயதான என்னை வீட்டுக்கு மூத்த மகளான தேவி கிருபா ஏத்துக்க மாட்டேங்குறா. அவள் தனியாக வாழ விரும்புகிறாள்,'' என அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டியுள்ளார். 

அதேசமயம், இந்த புகார் பற்றி தேவி கிருபா கூறுகையில், ''நான் ஊடகத்துறையில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை கணக்கு வழக்கின்றி என் அம்மா இஷ்டப்படி செலவு செஞ்சாங்க. பல நாளா பொறுத்துக்கிட்டாலும், ஒருகட்டத்தில் என்னால் தாங்க முடியல. அதற்கான கணக்கு தரும்படி காரணம் கேட்டேன். அதில் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளிய போயிட்டாங்க,'' என கூலாகச் சொன்னார்.

இதேபோல, தேவி கிருபாவின் தம்பி கோகுல் கூறும்போது, ''அம்மா, பணத்தை தாறுமாறாக செலவு செய்வது, அக்காவுக்கு பிடிக்கல. இதற்கான கணக்கு வழக்கை கேட்டதற்கு, அம்மா தர மறுத்துட்டாங்க. இதனால், 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றி இந்த நிலை வந்துவிட்டது. நான் மட்டும் என்ன செய்ய முடியும், அவங்க 2 பேரும் சமாதானமா போகாம எதுவும் நடக்காது. இந்த வீடு எல்லாமே அக்கா சம்பாதிச்சி வாங்கினது. அக்கா சொல்றபடிதான் நடந்துக்க முடியும்.

அது அம்மாவுக்கு புரியல. எங்களை பற்றி வெளியே பலவிதமாக வதந்திகளை பரப்பி விடறாங்க. நான் வேறு வழியின்றி, 2 பேருக்கும் சமாதானமாக நடந்துகொள்ள வேண்டியதாக உள்ளது. அக்கா சம்பாதிச்ச பணத்தை கணக்கு வழக்கின்றி அம்மா செலவு செய்தது மன்னிக்க முடியாத துரோகம். இதில் அம்மாதான் முதலில் இறங்கி வரவேண்டும்,'' எனக் குமுறுகிறார்.

மொத்தத்தில், டிவி சீரியலை விட பரபரப்பும் , குழப்பமும் நிறைந்ததாக இவர்களின் கதை உள்ளது.