நெற்றியில் பொட்டு இல்லை..! தலையில் ஹிஜாப்..! ரம்ஜானில் முஸ்லீமாக மாறிய விஜய் டிவி டிடி..!??

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி தலையில் ஹிஜாப் அணிந்து அமர்ந்தபடியே நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனது முஸ்லிம் நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி ஆவார். இவர் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார். தொடக்கத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்துவந்த டிடி பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானார். அதன்பின்னர் சூப்பர் சிங்கர் ,காபி வித் டிடி, அன்புடன் டிடி போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக தனது வித்தியாசமான பாணியில் கலக்கி வருகிறார்.

சின்னத்திரை டிவி தொகுப்பாளினி மட்டுமல்லாமல் இவர் சில திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பவர் பாண்டி, சர்வம் தாள மயம் போன்ற சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் டிடி தற்போது அந்த வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இடது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அமர்ந்து இந்த வீடியோவில் அவர் நடனம் ஆடியுள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த ஜோதா அக்பர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலுக்கு தலையில் ஹிஜாப் அணிந்து நடனமாடியுள்ள தொகுப்பாளினி டிடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்களை கூறியுள்ளார்.