தாலி கட்டும் முன்பே உல்லாசத்துக்கு அழைத்த டிவி நடிகர்! திருமணத்தை நிறுத்திய நடிகை!

மும்பை: டிவி நடிகர் சித்தார்த் சாகரை திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில் திடீரென அவரை பிரிவதாக, டிவி நடிகை சுபுஹி ஜோஷி அறிவித்துள்ளார்.


காமெடி சர்கஸ், தி கபில் சர்மா ஷோ போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் சித்தார்த் சாகர். இவர், கடந்த 2014ம் ஆண்டில் சுபுஹியுடன் டேட்டிங் செய்த நிலையில், 2 ஆண்டுகள் கழித்து, இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதற்கிடையே, சுபுஹி, காமெடி கிளாசஸ், பி சி பாடே போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். இதையடுத்து, மீண்டும் சித்தார்த் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பாக, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். 

இதன்பேரில், நிச்சயதார்த்தம் முடிவடைந்து, திருமணத்தை எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், திடீரென ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூற தொடங்கியுள்ளனர். இதன்படி, சித்தார்த் தன்னை அடிக்கடி ஆபாசமாக திட்டுவதோடு, ஓயாமல் படுக்கைக்கு அழைப்பதாகவும், திருமணத்திற்கு முன்பே செக்சில் ஆர்வம் காட்டுவதாகவும் சின்ன சின்ன விசயங்களுக்குக் கூட கோபப்பட்டு, அடிப்பதாகவும், இத்தகைய முரட்டு ஆசாமியை காதலித்தது மிகப்பெரிய தவறு. எனவே, அவரை திருமணம் செய்துகொள்ளும் முடிவை வாபஸ் பெறுவதாக, சுபுஹி குறிப்பிட்டுள்ளார். 

அதேசமயம், சித்தார்த் கூறுகையில், சுபுஹி நல்லவராக இருந்தாலும், அவருக்கு இந்த திருமணத்தில் பெரிய ஈடுபாடு இல்லை. வேறு எதோ உள்நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக, எனது அம்மா சந்தேகிக்கிறார். அதை உறுதிபடுத்தும் வகையில் சுபுஹியின் நடவடிக்கையும் உள்ளது. எனவே, நாங்கள் பிரிந்து செல்வதே நல்லது, என்று தெரிவித்துள்ளார். 

மொத்தத்தில், நல்ல இளம் ஜோடி என வாங்கியிருந்த பெயரை இவர்கள் இருவரும் கெடுத்துக் கொண்டதுதான் மிச்சம்.