பிரசவத்திற்கு பிறகு டிவி நடிகைக்கு உடல் வீங்கியது! காது கேட்கவில்லை! பதற வைக்கும் காரணம்!

டிவி நடிகை ஒருவருக்கு, பிரசவம் முடிந்த பின், ஒரு காது கேட்காமல் போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தாய்மை என்பது, ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகும். அதன்பின்தான், ஒவ்வொருவரின் வாழ்வும் புதிய மாற்றத்தை சந்திக்கிறது. இப்படித்தான் பல்வேறு ஆசைகளுடன் டிவி நடிகை சாவி மிட்டல் கர்ப்பம் தரித்தார். நினைத்தபடி, கரு வளர்ந்து, பிரசவமும் நல்ல முறையில் முடிந்தது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால், அவருக்கு திடீரென ஒரு காது கேட்காமல் போய்விட்டது.  இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாவி மிட்டல் விரிவான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ''நான் நலம்பெற வேண்டிய அனைவருக்கும் நன்றி, எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இன்னமும் மருத்துவமனையில்தான் உள்ளேன். என்னோட கால்கள் கடுமையாக வீங்கி, நீட்டி மடக்கவே முடியவில்லை. 

என் உடல் முழுக்க வீங்கியுள்ளது. தலை வெடிப்பது போல உள்ளது. முதுகு வலியும் கடுமையாக உள்ளது. ஒருபக்கம், காது கேட்கவில்லை. பிரசவத்திற்காக, தண்டுவடத்தில் ஊசி போட்டதால் ஏற்பட்ட பின்விளைவு இது. என்னால், சரியாக சாப்பிடக்கூட முடியவில்லை. தினசரி கடும் மருத்துவ பரிசோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது,'' என உருக்கமாக கூறியுள்ளார்.