பாம்பின் வாய் அருகே கைகளை நீட்டிய டிவி நடிகர்! ஒரே போடு! கதறிய பரிதாபம்! ஆனால்..?

லண்டன்: 6 அடி நீள மலைப்பாம்பை கடிக்கச் சொல்லி விளையாடிய டிவி நடிகர் கையில் ரத்தம் கொட்ட கதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் ஆடம் தோர்ன் மற்றும் ராப் கேவ்மேன் ஆலிவா. இவர்கள்  டிவி நிகழ்ச்சிக்காக, பல்வேறு வன உயிரினங்கள் தொடர்பான சம்பவங்களை மேற்கொள்வது வழக்கமாகும். இதன்படி, ஆடம் தோர்ன் ஹிஸ்டரி டிவி நிகழ்ச்சி ஒன்றில், 6 அடி நீள மலைப்பாம்பை கையில் பிடித்துக் கொண்டு, தன்னை கடிக்கும்படி சொல்கிறார்.

அந்த பாம்பும், அவரை வசமாக பிடித்து கவ்வி குதறுகிறது. இதனால், கைகளில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில், ஆடம் தோர்ன் வலியில் கதற, உடன் இருந்த ராப் கேவ்மேன், அவரை காப்பாற்றினார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. இது பார்வையாளர்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர்.  

ஆனால், குறிப்பிட்ட டிவி நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த ஸ்கிரிப்ட், 30 பற்கள் கொண்ட மலைப்பாம்பு ஒரு மனிதனை கடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும், அதற்கு எப்படி மருத்துவ சிகிச்சை செய்வது என்பதை பற்றி எடுத்துச் சொல்வதுதான் ஆகும். எனவே, தெரிந்தே விருப்பத்தின் பேரில்தான் ஆடம் தோர்ன் பாம்பிடம் கடிபட்டுள்ளார் என்பதால், இதில் விமர்சிக்க ஒன்றும் இல்லை என, ஹிஸ்டரி டிவி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.  

எப்படி இருந்தாலும், இளைஞர்களை தவறாக வழிநடத்தக்கூடிய இத்தகைய நிகழ்ச்சிகளை தயாரிக்கக்கூடாது, என, சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.