18 தொகுகளில் கொட்டும் பண மழை! அசத்தும் ஆளும் கட்சி! டென்ஷனில் தினகரன் கட்சியினர்

நாடாளுமன்றத் தேர்தலைவிட, சட்டமன்ற இடைத்தேர்தலில் 10 தொகுதிகளாவது வெல்வதுதான் எடப்பாடியின் இலக்கு. அப்போதுதான் தொடர்ந்து ஆட்சியை நடத்தமுடியும், இப்போது போட்டபணத்தையும் எடுக்க முடியும்.


அதனால் இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் எல்லாம் பணப் பட்டுவாடா நேற்று இரவே தொடங்கிவிட்டது. இதுவரை வெளியான தகவல்களில் இருந்து சாத்தூர் இடைத்தேர்தல் தொகுதியில் மட்டும்தான் ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

சாத்தூரில் அ.தி.மு.க. 2000 ரூபாய் கொடுத்ததை அடுத்து, தி.மு.க.வினரும் 1,000 ரூபாய் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இவர்களது பணப்பட்டுவாடாவை பார்த்து தினகரன் கட்சியினர் டென்ஷனில் உள்ளனர். 

பெரியகுளம், திருப்போரூர், நிலக்கோட்டை போன்ற மற்ற அனைத்து தொகுதிகளிலும் 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் தொகுதியில் மீண்டும் 1,000 ரூபாய் கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். 

நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்க அ.தி.மு.க.வினர் தயாராக இருக்கிறார்கள். தி.முக.வினர் 300 ரூபாய் கொடுக்க உள்ளனர். ஆக, போட்டி சுவாரஸ்யமாக மாறியிருக்கிறது. தினகரன் கட்சியினரும் பணம் கொடுத்தால், களம் மீண்டும் சூடு பிடித்துவிடும்.