பாஜகவை பார்த்து ஸ்டாலினுக்கு பயம்! நம்பிக்கை இல்லா தீர்மான ரகசியத்தை உடைத்த தினகரன்!

மதுரையில் தேனி மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளுடன் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி:- தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதவி பறிப்போனது தான் வருத்தம் அது யாருக்கும் இருப்பது தான் அவர்களது வறுமை நிலைக்கு பதவி தான் காரணம் என நினைக்கிறார். அவரைத்தவிர வேறு யாருக்கும் அப்படி ஒரு வருத்தம் இல்லை. கடந்த 6 மாத காலமாகவே தங்க தமிழ்ச்செல்வன் போக்கு சரியில்லை தான் தொடர்ந்து அதிமுக - திமுக என இருத்தரப்பிலும் பேசி வந்தார்.

அதிமுக வில் இணைய ஒ.பி.எஸ் தரப்பில் பலத்த எதிர்ப்பு நிலவியது, திமுகவிலும் நிர்வாகிகளுக்கு பஞ்சம் என்பதால் தான் அங்கு சென்று விட்டார் எனச் சாடியவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த போதும் கட்சி தாவல் இருந்தது தானே, அதிலும் என்னோடுனிருப்பவர்கள் யாராகிலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் ஆனால் அவர்கள் போக மாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் குறித்து ஆட்சியாளர்கள் சிறிதும் கண்டுக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியவர் எம்.பி ரவீந்திரநாத்குமார் நாடாளுமன்றத்தில் தண்ணீர்ப் பிரச்சனை இல்லை என பேசியது குறித்து தேனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றவர். திமுக டெல்லியில் உள்ளவர்களுக்கு பயந்து தான், சபாநாயகர் மீதான தீர்மானத்தில் பின் வாங்கியதாக குற்றம் சாடினார்.