கமலிடம் தோற்றுப்போன டி.டி.வி! டெபாசிட் தொகைக்கு சண்டை ஆரம்பம்!

ஸ்டாலினை விட அதிக கனவுடன் இருந்தவர் டி.டி.வி. தினகரன். தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு அ.தி.மு.க. வரப்போகிறது, இனி... நான் சொல்வதுதான் சட்டம் என்று முழங்கிக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்குக் கிடைத்தது என்னவோ டார்ச் லைட்டைவிட குறைந்த வெளிச்சம்.


ஆம், பெரும்பாலான இடங்களில் கமல்ஹாசனின் மய்யத்தைவிட குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறார் தினகரன். குறிப்பாக சென்னையின் மூன்று தொகுதிகளில் ஐந்தாவது இடத்துக்குப் போய்விட்டார். சாருபாலா மட்டுமே 1 லட்சம் ஓட்டைத் தொட்டவர். கோவை, பொள்ளாச்சி போன்ற அனைத்து  சிட்டிகளிலும் தினகரனை தாண்டி வந்துவிட்டார் கமல்ஹாசன். கிராமங்களுக்கு இன்னமும் கமல் சென்றடையாத காரணத்தால், அங்கு மட்டும் ஓட்டுகள் குறைவாக விழுந்திருக்கிறது.

ஆரம்பகட்டத்திலேயே, சட்ட மன்றத்தில் மட்டும் அ.ம.மு.க. நின்றால் போதும் என்று சசிகலா ஆலோசனை சொன்னார், ஆனால், அதைக் கேட்காமல் நாடாளுமன்றத்துக்கும் நின்றார். அதற்காக கோடி கோடியாக பணம் செலவழிக்கப்பட்டது.

இப்போது பணமும் போச்சு, ஓட்டும் போச்சு, மானமும் போச்சு. காலையில் ஓட்டு நிலவரம் தெரிந்ததும் தினகரன் மனைவி அனுராதா கடும் கோபம் அடைந்தாராம். எல்லோரையும் ஏமாற்றுவது போன்று என்னையும் ஏமாற்றி, பணத்தை காலி செய்துவிட்டீர்கள், இனிமேல் கட்சி வேண்டாம், எப்படியாவது அ.தி.மு.க.வில் சேரப் பாருங்கள் என்று சொல்லி சண்டை போட்டிருக்கிறாராம். இப்போது யார் யாரெல்லாம் கட்சி மாறப் போகிறார்களோ என்ற கலக்கத்திலும் இருக்கிறார்.

அதே நேரம், தினகரனைவிட அதிக வாக்குகள் வாங்கினாலும், கமல்ஹாசனும் கடும் அதிருப்தியில்தான் இருக்கிறார். நிச்சயம் எங்காவது ஒருசில தொகுதியில் இரண்டாவது இடத்தை பிடித்துவிடலாம் என்று நம்பிக்கொண்டு இருந்தார், கடைசியில் தினகரன் இடத்தைத்தான் பிடித்திருக்கிறார். அதனால் நிர்வாகிகள் யாரிடமும் பேசாமல் அப்செட் ஆகிவிட்டார்.

ஆர்.கே.நகரில் என்னிடம் தி.மு.க. டெபாசிட் பறிகொடுத்தது என்று வாய் கிழியப் பேசிவந்த தினகரனின் வேட்பாளர்கள், இப்போது அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்துவிட்டனர். 

இப்போது வீட்டிலும் நிம்மதி இல்லாமல் தினகரன் தவித்துவருகிறார்.