டிடிவி தினகரன் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

டிடிவி தினகரன் கட்சிக்கு பொதுவான சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்ரதலில் போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சியினருக்கு பரிசு பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்படாத தனது கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம் அதே சமயம் தினகரன் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னத்தை ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தங்களுக்கு சிலிண்டர் பரிசு முடிச்சு உள்ளிட்ட மூன்று மூன்று சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் தினகரன் கட்சிக்கு பரிசு முடிச்சு எனும் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தினகரன் கட்சி சார்பில் தமிழகம் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்த பரிசு முடிச்சு சின்னம் பொருந்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொதுவான சின்னம் கிடைத்துள்ள தான் மூலம் தினகரன் தரப்பு தேர்தலில் சிரமமின்றி களமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினகரன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்