சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல்! டிடிவி தினகரன் கட்சியின் நிலை என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளன.


ஆனால் டிடிவி தினகரன் அவர்களின் அமமுக கட்சி மட்டும் எந்த அறிவிப்பும் இல்லாமல் மௌனம் காத்து வருகிறது. சமீபத்தில் நடந்த இரண்டு தொகுதிக்கான இடைத் தேர்தல்களிலும் அமமுக கட்சி போட்டியிடவில்லை. 

திமுக அதிமுக போன்ற காட்சிகள் எல்லாம் வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்ப படிவங்களை பெறுவது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தல் வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர். ஆனால் அமமுக கட்சியில் இருந்து வேட்பாளர் விண்ணப்ப படிவம் பற்றி எந்த அறிவிப்பும் வராததால் அக்கட்சிக்காரர்கள் இடையே மந்தமான நிலை நிலவி வருகிறது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை பேட்டி ஒன்றில் சந்தித்த டிடிவி தினகரன் உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் போட்டு விடுவோம் என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டார். அதற்கு பிறகு வேறு எந்த ஒரு அறிவிப்பும் கட்சி மேலிடத்தில் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முறையாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொது சின்னம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அமமுக கட்சி உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் மௌனம் காத்த வருவதற்கு பொது சின்னம் பெறும் விவகாரமே காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.