டிஆர் கண்ணீர்! எல்லோரும் கேள்வி கேட்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டான் சிம்பு!

நடிகர் சிம்பு தன்னை எல்லோரும் கேள்வி கேட்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டதை நினைத்து டி ராஜேந்தர் கண் கலங்கினார்.


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து டி ராஜேந்தர் பேசியதாவது:- என்னுடைய இளைய மகன் குறளரசன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது.  முதலமைச்சரை சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழ் கொடுத்தேன்.

அதனை சில முக்கிய பத்திரிகைகள் வெளியிடவில்லை என்று கூறிய போது டி.ஆர் கண் கலங்கினார். ஆனால் ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், உதயநிதி , திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், நடிகர்கள் என திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டி.ஆர் தெரிவித்தார். 

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட காதலை ஏற்றுக்கொள்பவன். அதனால்தான் குறளரசன் விரும்பியபடி திருமணம் நடைபெற்றது தொடர்ந்து சிம்புவுக்கு திருமணம் எப்போது என்று செய்தியாளர்கள்  கேட்டனர்.

நீங்கள் இப்படி கேள்வி கேட்கும் நிலைக்கு சிம்புவும், இறைவனும்  என்னை வைத்துள்ளதும், விதி என்னை  வைத்துள்ளதும் வருத்தமாக உள்ளது. தற்போது இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் நிலையில் நான் இல்லை என கூறி கண்ணீர் வடித்தார்.