ஸ்ரீபெரும்பதூர்! பாமகவை கதற விடும் திமுகவின் டி.ஆர்.பாலு!

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் TR பாலு முன்னிலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன.


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு  எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.இதில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 38 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வந்தவண்ணம் உள்ளன. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர்  மக்களவை  தொகுதியில் திமுக வின்  TR பாலு சுமார் 4000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. பாமக சார்பில் வைத்திலிங்கம்  இந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வைத்திலிங்கம் சுமார் 4000 வாக்குகள் பின்னடைவில் உள்ளார் இதனால் திமுக வினர் உற்சாகத்தில் உள்ளனர். 

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.