குடும்பத்திற்கு உள்ளேயே திருடன்! டிஆர் பாலு மகள் வங்கிக் கணக்கில் பணத்தை சுருட்டிய மகன்..! போலீஸ் ஸ்டேசனில் தெரியவந்த பகீர் உண்மை!

திமுக எம் பி டி ஆர் பாலுவின் மகள் தனது வங்கி கணக்கில் இருந்து 1.5 லட்ச ரூபாய் மாயமாகி உள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வீட்டிலேயே தங்களது நேரத்தை கழித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செல்போன், ஆன்லைன் கேம், டிவி, ரேடியோ போன்றவற்றை பயன்படுத்தி தங்களது நேரங்களை அதில் செலவழித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பி டி.ஆர் பாலுவின் மகள் மனோன்மணி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய அக்கவுண்டில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் திடீரென மாயமாகி உள்ளது என்று குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மனோன்மணி அவர்களின் மகன் டெபிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் கேம் விளையாடி வந்திருக்கிறார். அவரது மகன் ஆன்லைன் கேம் விளையாடியதால் டெபிட் கார்டில் இருந்த 1.5 லட்சம் ரூபாய் மாயமாகியுள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது