வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலுக்காக TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு..!

இந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறப்போகும் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்த TNPSC தேர்வுகள் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


TNPSC குரூப்-1 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவை டிசம்பர் 22 முதல் 30 வரை நடைபெறும் என்று அரசு தேர்வாணையம் முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தலுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. 

ஆகையால் அரசு தேர்வாணையம் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்களை தற்போது மாற்றி அமைத்துள்ளது. அதாவது உள்ளாட்சித் தேர்தல் காரணமாக வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திட்டமிட்டபடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் டிஎன்பிஎஸ்சி இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த நேர்முகத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வரும் 27.12.2019 முதல் 12.01.2020 வரை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்வாணையம் தகவல் அளித்துள்ளது.