TNPL போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது.


தமிழ் நாட்டின் ஐபிஎல் என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் காலேஜ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது . மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கு பெற்றுள்ளன .

டிஎன்பிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் .புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் .

டிஎன்பிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும் , இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் மணிக்கு 60 லட்சம் ரூபாயும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 40 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது .