கோலாகலமாக தொடங்கியது TNPL! போட்டிகளை எங்கே எப்படி பார்க்கலாம்?

டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது .


தமிழ் நாட்டின் ஐபிஎல் என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் காலேஜ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது . மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கு பெற்றுள்ளன . திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணிக்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக செயல்படுகிறார்.

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு உலகக்கோப்பை இந்திய அணியில் விளையாடிய சிஜய் ஷங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  TUTI patriots அணிக்கு சுழற் பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்படவுள்ளார்.

காரைக்குடி காளை அணிக்கு ஸ்ரீகாந்த் அனிருதா கேப்டனாகவும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு பாபா இந்திரஜித் கேப்டனாகவும் செயல்படுவார்கள். லிவா கோவை கிங்ஸ் அணிக்கு அபினவ் முகுந்த் கேப்டனாகவும், VB காஞ்சி வீரன்ஸ் அணிக்கு பாபா அப்ரஜித் தலைமையும் ஏற்றுள்ளனர்.

TNPL போட்டிகள் அனைத்தும் சென்னை சேப்பாக்கம் மைதானம் , திண்டுக்கல் என்பிஆர் காலேஜ் மைதானம் மற்றும் திருநெல்வேலி இந்தியன் சிமெண்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்க்கலாம். மேலும் நேரடி ஒளிபரப்பினை ஹாட் ஸ்டாரிலும் பார்க்கலாம்.