குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை! உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அதிரடி திட்டம்!

பண்ணை பசுமைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.


இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாகவே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் வெங்காயத்தின் விலையை குறைப்பதற்காக கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள பண்ணைப் பசுமை கடைகளில் குறைந்த விலைக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.