இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அபிநந்தனுக்கு பரம் வீர் சக்ரா விருது! பாக்., போர் விமானத்தை தெறிக்க விட்டதால் கவுரவம்!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.1.01 கோடி நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.1.01 கோடி நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் மத்திய அரசு வழங்கும் நிதியில் ரூ.35 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்துக்கள் பணிக்காக தொகை, காப்பீடு, வீரதீர செயல்களுக்கான நிதி ஆகியவற்றை சேர்த்து ரூ.1.01கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அபிநந்தனுக்கு ராணுவத்தின் உயரிய விருது வழங்கக்கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் தீரத்துடன் செயல்பட்ட அபிநந்தனை பாராட்டி விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் பழனிசாமி. பரம்வீர் சக்ரா என்பது ராணுவத்தில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆகும்.
இந்த விருது நிச்சயமாக அபிநந்தனுக்கு அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.