டிக்டாக் நாயகியுடன் விஜய் டிவி பிரபலம் ஒருவர் உடனிருந்த புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி ஆண் பிரபலத்துடன் நெருக்கமான டிக்டாக் இலக்கியா..! அது இருப்பது தெரியாமல் வெளியிட்ட புகைப்படம்..! என்னது தெரியுமா?

டிக்டாக் வீடியோக்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் இலக்கியா. இந்த செயலியை இளைஞர்கள் மிகவும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி பெண்கள் இந்த செயலியின் மூலம் கவர்ச்சியை அதிகமாக வெளிப்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. அற்பமானலைக்களுக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் இந்த செயலியில் மூழ்கி தங்களுடைய வாழ்க்கையை இழந்து வருகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.
இதேபோன்று அற்பமான லைக்குகளுக்காக 2018-ஆம் ஆண்டில் சினிமாவில் வெளிவந்த குத்துப்பாட்டுகளை டிக்டாக்கில் கவர்ச்சியாக நடித்துக்காட்டி பிரபலமானவர் இலக்கியா. ஆயிரக்கணக்கான அலைகளுக்கு ஆசைப்பட்ட இவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் போடும் ஒரு வீடியோவுக்கு கிட்டத்தட்ட லட்சக்கணக்கான பேர் லைக்குகளை அள்ளி தருகின்றனர்.
சமீபத்தில் கூட தன்னை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி சிலர் ஏமாற்றிவிட்டதாக ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் விஜய் டிவி பிரபலம் ஒருவருடன் இணைந்திருக்கும் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் வெளியான "அது இது எது" என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவரும்,இலக்கியாவும் நெருக்கமாக இருப்பது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. புகைப்படத்திற்கு பின்னால் பெகார்டி மதுபாட்டில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.