பெரிய வெங்காயம் வாங்கினால் டீ சர்ட் இலவசம்! காய்கறி கடைக்காரரின் அதிரடி ஆஃபர்! எங்க தெரியுமா?

வெங்காயம் வாங்கினால் டீசர்ட் இலவசமாக விற்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டவுடன் 1,500 கிலோ வெங்காயம் விற்கப்பட்டுள்ளது கேரள மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் கொல்லம் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திற்குட்பட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே பிரகாசம் என்பவர் காய்கறி கடையை நடத்தி வந்துள்ளார். பெரிய வெங்காயத்தின் விலை மிகவும் அதிகமாக விற்கப்படுவதால், அவற்றை விற்பனை செய்வதற்காக ஒரு சலுகையை அறிவித்தார்.

400 ரூபாய் கொடுத்து 5 கிலோ பெரிய வெங்காயத்தை வாங்கினால், ஒரு டீ சர்ட் இலவசமாக விற்கப்படும் என்று அவர் அறிவித்தார். அறிவித்த அடுத்த 2 நாட்களிலேயே 1500 கிலோ பெரிய வெங்காயத்தை விற்பனை செய்துள்ளார். மேலும் அதற்குரிய டீசர்ட்களையும் இலவசமாக விற்பனை செய்துள்ளார். 

இதுகுறித்து பிரகாசம் கூறுகையில், "விலைவாசி உயரும் போது மக்கள் கோபப்படுவது எதார்த்தம். அவர்களை சமாதான படுத்துவதற்காக சில சலுகைகளை அறிவிப்போம். அப்போதுதான் மக்கள் சந்தோஷப்பட்டு பொருட்களை வாங்குவர்" என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பானது கேரள மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியது.