சிம்பு விரைவில் அரசியலுக்கு வருவார் ! டி.ஆர். போட்ட புது குண்டு!

கருணாநிதியை பார்த்து வரவில்லை அண்ணாவின் அடுக்குமொழியை கேட்டு திமுகவில் சேர்ந்தேன் நடிகர் டி.ராஜேந்திரன் பேட்டி


சென்னை விமான நிலையத்தில் நடிகர் டி.ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது ஜல்லிக்கட்டில் அரசியல்வாதிகள் குரல் எடுப்பட்டதா?. மக்கள் பிரச்சனை என்பது வேறு. ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேர் பலியானார்கள். இதில் ஏதாவது அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள் பலியானார்களா?

விலைவாசியை குறைக்க சாகும் வரை எந்த அரசியல்கட்சியாவது உண்ணாவிரதம் இருக்குமா? மக்கள் தான் சாவார்கள். 13 பேர் பலியானபோது வாய் திறக்காதவர்கள் தான் தற்போது தேர்தலில் நிற்கிறார்கள். ஸ்டெர்லைட் விவகாரம் நடக்கும் போது நேரில் சென்றேன். 

அப்போது எனக்கு பாதுகாப்பா இருந்தது மக்கள் தான். கடவுளை நம்புகிறேன். மக்கள் எந்தவொரு போராட்டம் நடத்தினாலும் போய் நிற்கிறேன். கர்நாடகத்திற்காக நடிகர் சிம்பு வித்தயாசமாக குரல் கொடுத்தார். சிம்பு பற்றி என்னிடம் கேட்டகாதீர்கள். எம்.ஜி.ஆர். காலத்திலேயே அரசியலுக்கு வந்தேன்.  

இதில் என் மகன் வேறு வர வேண்டுமா அரசியலுக்கு?  அரசியலுக்கு வருவேன் என்று சிம்பு சொல்கிறார். எப்போது அரசியலுக்கு வருவார் என்று தெரியவில்லை. சட்டமன்றத்தில் தேர்தல் தான் பிரதானம். நாடாளுமன்ற தேர்தலில் காட்டுவேன் நிதானம். எனக்கு தேவை தன்மானம், இனமானம். யாருக்காகவும் வைக்க மாட்டேன் அடமானம். அதுக்காக தேடமாட்டேன் வெகுமானம்.

தமிழகத்தில் 2 தலைவர்கள் இல்லை. ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகளாகியும் ஏன் எதற்கு இறந்தார் என்று கண்டுபிடிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். எதிர்கட்சிகள் என்ன செய்கிறார்கள். முகிலன் காணாமல் போய் மாதக்கணக்கில் ஆகிறது கண்டுபிடிக்கப்பட்டாரா. முகிலன் விவகாரத்தில் தமிழக அரசு கவலைப்படாது.

தமிழகத்தில் யாருடன் வேண்டுமானாலும் மோடி வைக்கலாம் கூட்டு. ஆனால் தமிழகத்தில் கவனம் காட்ட வேண்டும். உலகம் முழுவதும் சுற்றிய பிரதமர் தமிழகத்தில் கஜா புயல் வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் கூட இல்லையா.  நடிகை விட்டு கல்யாணத்திற்கு போகிறார் மோடி. தமிழக மக்கள் கஷ்டப்பட்டபோது வந்து பார்க்கவில்லை. விவசாயிகளை யார் காப்பாற்றினார்கள். 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேர் பலியானபோது பிரதமர், அதிமுக அமைச்சர்கள் யாராவது கேட்டார்களா. கூட்டணி வைக்க கொள்கை, லட்சியம் வேண்டும். திமுகவில் இருந்து அழைக்காதது பற்றி கவலையில்லை. விஜயகாந்த்தை ஸ்டாலின், ரஜினி உள்பட எல்லாரும் பார்த்தார்கள். ஆனால் யாருடன் கூட்டணி. உரிய மரியாதை தரும் கட்சியுடன் கூட்டணி என்றால் என்ன மரியாதை.

அண்ணாவின் கொள்கையை பார்த்து திமுகவிற்கு வந்தவன். அப்போது திமுகவில் கருணாநிதி இருந்தார். அண்ணாவின் அடுக்குமொழி, தமிழை பார்த்து திமுகவிற்கு வந்தேன். கருணாநிதியை பார்த்து திமுகவிற்கு வரவில்லை. திமுக கருணாநிதி கொடுத்தது அல்ல. அது அண்ணா கொடுத்த சொத்து. 

கஜா புயலின் போது பிரதமர் வந்திருந்தால் நல்ல வரவேற்பு இருந்து இருக்கும். நான் காங்கிரஸ் எதிர்ப்பாளன்.  ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடினேன். மோடி தமிழகத்திற்கு இத்ற்கு முன்பே நல்லது செய்திருக்கலாமே. இவ்வாறு அவர் கூறினார்.