அஸ்ஸாமை உலுக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்..! இதுவரை 2500 உயிர்கள் பறிபோனது!

அசாம் மாநிலத்தில் பரவிவரும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலினால் ஆயிரக்கணக்கான பன்றிகள் உயிரிழந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிவேகமாக பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மாநிலத்திற்கு உட்பட்ட 306 கிராமங்களை சேர்ந்த பன்றிகள் ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோயும் சீனா நாட்டிலிருந்துதான் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தை சேர்ந்த சில மாவட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் கொத்துக்கொத்தாக பன்றிகள் உயிரிழந்துள்ளன. ஆனால் இதற்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், "சீனாவிலிருந்து முதன்முதலில் இந்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் அருணாச்சலப் பிரதேசத்தை தாக்கியது. அங்கிருந்து அசாம் மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பெரிதளவில் பாதித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் சிக்கிக்கொண்ட பன்றிகளை அழிக்காமல், அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆரோக்கியமாக இருக்கும் பன்றிகளை சாப்பிடுவதற்கு எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை"என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவமானது அசாம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.