115 அடி உயர கட்டிடங்களுக்கு நடுவில் நீச்சல் குளம்!!! லண்டனில் நகரில் நிகழப்போகும் அதிசயம்!!!

லண்டனில் வானளவு உயர்ந்துள்ள 2 கட்டிடங்களுக்கு நடுவிலே நீச்சல் குளம் கட்டப்படும் செய்தி வெளியாகியுள்ளது.


இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இங்கு 115 அடி உயரத்தில் 2 கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவற்றின் இடையில் அழகிய நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட உள்ளது. அதிக அழுத்தத்தையும் பாரத்தையும் தாங்கிக்கொள்ளும் வகையில் தடிமனான கண்ணாடிகளை உபயோகித்து நீச்சல் குளமானது கட்டப்படவுள்ளது.

இந்த நீச்சல் குளம் கிட்டத்தட்ட 25 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும், 3 மீட்டர் ஆழத்திலும் கட்டப்படவுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் மற்றும் மற்றும் பிற பார்வையாளர்களை எளிதான முறையில் காண இயலும். 

இந்த நீச்சல் குளமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தொடங்கப்படவுள்ளது.