நான்கு புறமும் நெருப்பு! நடுவே ஆளுயர குழி! உடலை உயிரோடு புதைத்து சாமியார் சொன்ன மந்திரம்! தூத்துக்குடி திகுதிகு!

கொரோனாவை விரட்டுவதற்காக தனது உடலை பூமியில் புதைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டி கொண்டு நெருப்பு வளையத்திற்குள் நடுவே யாகம் செய்த சாமியார் சீனிவாசனின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவை ஒழிப்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாமியார் சீனிவாசன் என்பவர் பிரத்தியங்கிரா தேவி கோவில் ஒன்றில் சிறப்பு பூஜை ஒன்றை செய்துள்ளார். அந்த பூஜையில் கோவிலில் குழி தோண்டி அதனுள் இறங்கிய சாமியார் சீனிவாசன் தன் உடல் முழுவதையும் பூமிக்குள் புதைத்து கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டியபடி தன்னைச் சுற்றி நெருப்பு எரிய வைத்து மந்திரங்களை உச்சரித்தபடி வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். 

பூமிக்குள் உடலை புதைத்துக் கொண்டு பூஜை செய்வதன் மூலமாக கொரோனா உலகத்தை விட்டு ஓடிவிடும் என்று நம்புகிறார் சாமியார் சீனிவாசன். கடந்த வருடம் ஊருக்குள் மழை பெய்ய வைப்பதாக கூறி 100 கிலோ மிளகாய் வத்தலை தீயிலிட்டு எரித்து சாம்பலாக்கி சம்பவம் செய்தவர் தான் சாமியார் சீனிவாசன்.

 அதேபோல கிலோ கணக்கில் பாகற் காயை வெட்டி அதில் குங்குமம் தடவி அவற்றை தீயிலிட்டு யாகம் செய்தவர் சாமியார் சீனிவாசன். கொரோனாவை விரட்டுவதற்காக தமது உடலை பூமியில் புதைத்துக்கொண்டு நெருப்பு வளையத்திற்குள் நடுவே யாகம் செய்த சாமியார் சீனிவாசனின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.