மாதவிடாய் நேரத்தில் மனைவிகள் சமைத்தால் கணவன்கள் எருமை மாடுகளாக பிறப்பார்கள்! சாமியாரின் பகீர் கண்டுபிடிப்பு!

சுவாமி குருஷ்னஸ்வரப் தாஸ்ஜி என்பவர் மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைத்தால் அடுத்த பிறவியில் அவர்கள் நாயாக பிறப்பார்கள் எனவும் அதேபோல் அவர்கள் சமைக்கும் உணவை அவர்களது கணவன்மார்கள் சாப்பிட்டால் எருமையாக பிறப்பார்கள் எனவும் கூறி மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் மொத்தம் ஆயிரத்து 500 மாணவிகள் படித்து வருகின்றனர் . இதில் 60 மாணவிகள் அங்கிருக்கும் விடுதியில் தங்கி தங்களுடைய படிப்பை படித்து வருகின்றனர். 

இந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் தனியாக இருக்கும் மாறு விடுதியை நடத்தி வருபவர்கள் கட்டளையிட்டு உள்ளனர். ஆனால் இந்த மாணவிகள் அதனை ஏற்காமல் இருந்துள்ளதாக அவர்கள் தகவல் கிடைத்துள்ளது. இதனால் விடுதியில் தங்கி இருந்த 60 மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி அங்கிருந்தவர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அந்த மாணவிகள் மிகுந்த வேதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்த கல்லூரியின் மதபோதகர் சுவாமி குருஷ்னஷ்வரப் தாஸ்ஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய சுவாமிஜி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமைத்தால் அவர்கள் அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறப்பார்கள் எனவும் அவர்கள் சமைக்கும் உணவை அவர்களுடைய கணவன்மார்கள் சாப்பிட்டால் அவர்கள் எளிமையாக பிறப்பார்கள் எனவும் கூறினார்.

அந்த வீடியோ பதிவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சுவாமிஜியின் இந்த கருத்திற்கு மிகப்பெரிய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.