சமையல் அறையில் சீறிய கொடிய விஷப் பாம்பு! பார்த்த நொடியில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

வீட்டிற்குள் கொடிய பாம்பொன்று புகுந்த சம்பவமானது ஒரிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரிசா மாநிலத்தில் மாயூர்ப் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு பாரிபாடா என்னும் கிராமம் அமைந்துள்ளது. பருவமழை காலங்களில் காடுகளிலிருந்து கொடூர விலங்குகள் உணவைத் தேடி மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகின்றன.

இதேபோன்று பாரிபாடா என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு வீட்டிற்குள் கொடிய விஷத்தை கக்கும் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பானது வீட்டின் சமையல் பாத்திரங்களுக்கு அடியே தஞ்சம் புகுந்துள்ளது. அந்த வீட்டுப்பெண் சமையல் அறையில் பாத்திரங்களை சமைத்துக் கொண்டிருந்த போது பாம்பு சீறும் சப்தம் கேட்டு அலறியடித்துள்ளார். ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் விரைந்து வந்து சமையலறையில் தேடினர். அப்போது விஷப்பாம்பு ஒன்று பாத்திரங்களுக்கு அடியே மறைந்திருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் வசிக்கும் பாம்பாட்டி வரவழைத்து பாம்பை பிடித்தனர். 

அதன் பிறகு அந்த பாம்பாட்டி பாம்பினை வனத்திற்குள் கொண்டுவிட்டார். இந்த சம்பவமானது அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.