வயது தான் 44..! ஆனால்? 27 வயது காதலனுடன் சீனியர் நடிகையின் புகைப்படங்கள் உள்ளே!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சுஷ்மிதாசென் தன்னுடைய ரசிகர்களை உற்சாகம் படுத்துவதற்காக புதிய வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.


உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக இந்த கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடெங்கிலும் உள்ள உடற்பயிற்சி கூடம் , ஷாப்பிங் மால்கள் , டாஸ்மாக் கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

ஜிம் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் நடிகர்-நடிகைகள் அவரவர் தங்களுடைய வீடுகளிலேயே உடற்பயிற்சி செய்து கொள்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகையான சுஷ்மிதாசென் தன்னுடைய வீட்டில் உடற்பயிற்சி செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் உற்சாகத்தையும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

அப்படியான நடிகை சுஷ்மிதாசென் மீண்டும் தற்போது புதிய உடற்பயிற்சி வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் நடிகை சுஷ்மிதாசென், காதலன் ரோஹ்மன் ஷாலுடன் இணைந்து உடற்பயிற்சி செய்கிறார்.மேலும் வீடியோவிற்கு கேப்சனாக, கடினமான காலங்கள் நீடிக்காது ... கடினமான மனிதர்கள் செய்கிறார்கள் !! வாழ்க்கையில் உறுதியுடன் இருப்பது சக்தி வாய்ந்தது ... வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் !!! மேலும் நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் சேவையில் இருக்க வேண்டும், எல்லா இடையூறுகளுக்கும் எதிராக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது புத்திசாலித்தனம், வாழ்க்கை வாழ்வதற்கு இது உதவியாக இருக்க வேண்டும் !! என்று குறிப்பிட்டிருக்கிறார்.