மரணம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு சுஷ்மா நன்றி தெரிவித்திருப்பது கேட்போரை உறைய வைப்பதாக உள்ளது.
இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்! பிரதமருக்கு நன்றி கூறிவிட்டு மரணம் அடைந்த சுஷ்மா! அதிர வைக்கும் தகவல்!

மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சுஷ்மா ஸ்வராஜ் மரணம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தான் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்தவர்களில் மிக முக்கியமானவர் சுஷ்மா ஆவார்.
இந்த நிலையில் கடந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி புதுமுகங்க்ளுக்கு அவர் வாய்ப்பளித்தார். இந்த நிலையில் இன்று இரவு 7.33 மணிக்கு சரியாக ஒரு ட்வீட் செய்துள்ளார் சுஷ்மா ஸ்வராஜ். தன் வாழ்நாளில் இந்த நேரத்திற்காகத்தான் தான் காத்திருந்ததாகவும் தன்னுடைய வாழ்நாளில் இதனை பார்த்துவிட்டதாகவும் கூறி மோடிக்கு அவர் நன்றி கூறியிருந்தார்.
அதாவது காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் நாளுக்காக காத்திருந்ததாகவும் அதனை தன் வாழ்நாளில் பார்த்துவிட்டதாகவும் அதற்கு காரணமான மோடிக்கு நன்றி என்றும் அந்த ட்வீட்டில் சுஷ்மா கூறியிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் தான் மாரடைப்பு ஏற்பட்டு சுஷ்மா உயிரிழந்துள்ளார்.
மரணம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர் மோடிக்கு நன்றி கூறியிருப்பது உண்மையில் கேட்போரை கலங்க வைப்பதாக உள்ளது. பிரதமர் மோடியும் உடனடியாக சுஷ்மா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.