பாஜக முதுபெரும் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திடீர் மரணம்! நாடு முழுவதும் அதிர்ச்சி!

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திடீரென மரணம் அடைந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சுஷ்மா ஸ்வராஜூக்கு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுஷ்மா ஸ்வராஜை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

66 வயதான சுஸ்மா ஸ்வராஜ் மரணம் அடைந்த தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்கிய அவரை ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சுஷ்மா திடிரென இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மா மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.