இளம் காதலன் உடல் மீது ஏறி சீனியர் நடிகை செய்த தகாத செயல்! வைரல் வீடியோ!

பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் எப்போதுமே தன்னுடைய காதலை மிக அழகாக வெளிப்படுத்த கூடியவர். இவர் தன் காதலரிடம் காதலை வெளிப்படுத்தும் விதம் முற்றிலும் மாறுபட்டது என்றே கூறலாம்.


நடிகை சுஷ்மிதா சென் தன்னுடைய காதலர் ரோமன் ஷாலுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு இடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று மிகவும் வைரலாகி கொண்டிருக்கிறது. இன்று காலை நடிகை சுஷ்மிதா செனும் , அவரது காதலர்  ரோமன் ஷாலும் இணைந்து உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற வீடியோ பதிவை வெளியீட்டு உள்ளார். 

இதில் சுஷ்மிதா,  ரோமன் ஷால் மீது ஏறி கொண்டு இரண்டு பேரும் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் விதமாக உள்ளது அந்த வீடியோ பதிவு.  இந்த வீடியோவை பதிவு இட்ட சில மணி நேரங்களிலேயே, 2 லட்சம் லைக்ஸ்களை  இன்ஸ்டாகிராமில் அள்ளியது.  மேலும் கேப்சனாக, "இருவரும் இணைந்து ஒன்றாக உடற்பயிற்சி செய்வது என்பது வரம்,  ரோமன் என்னுடைய ஏஞ்செல்", "#ஸ்ட்ரென்த் #ஸ்டெபிளிட்டி #டிஸிப்ளின், காதல் மிக அழகானது", என்றும் ஹாஷ்டாகும் போட்டிருந்தார். 

ஆனால் இதனை தகாத செயல் என்று ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சுஷ்மிதா சென் மற்றும் ரோமன் ஷால் இருவரும் கடந்த ஆண்டு முதல் தங்களை காதலர்களாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்தனர். சுஷ்மிதா சென் வைரல் வீடியோ லிங்க் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.instagram.com/p/Bx8aM_Ph-xW/?utm_source=ig_web_copy_link