மோதிப்பாக்கலாமா? சூர்யாவுடன் மல்லுக்கட்டப்போகும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சூர்யா கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இதனையடுத்து கே.வி .ஆனந்தின் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இந்த திரைப்படமானது வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி திரைக்கு திரையிடப்படும் என்று  திரைப்படக் குழு அறிவித்துள்ளது.

இதற்குப் பின் சூர்யா நடிக்கும் 38 வது  திரைப்படம்தான் சூரரை போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையின் நிகழ்வுகளை அடிப்படையாகக்  கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கான  இசையை  ஜி.வி .பிரகாஷ் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தை இறுதிசுற்று திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த திரைப்படமானது வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகும் என திரைப்படக் குழு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் தான் நம்ம வீட்டு பிள்ளை இது சிவகார்த்திகேயனின் 15வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இரும்புத்திரை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மித்ரன்   இயக்கியுள்ளார். 

மேலும் இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் , ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆகவே சூர்யாவின் காப்பான் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படமும் ஒரே நாளில் மோத உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது