விஜய், அஜித் படங்களும் செய்யாத சாதனை! சூர்யாவின் NGK அடித்து தூக்கியது!

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில், நடிகர் சூர்யாவின் நடிப்பில் இம்மாத இறுதியில் வெளிவரவிருக்கும் NGK திரைப்படம் அணைத்து தரப்பு ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யா நந்தா கோபாலன் குமரன் எனும் சாதாரண இளைஞனாக நடித்திருக்கிறார். நடிகர் சூர்யா இந்த படத்தில் அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக அரசியலில் நுழைந்து என்னவெல்லாம் செய்கிறார் என்பது போல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த படம் தமிழ் திரையுலகில் எந்த படமும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளது. தென் கொரியாவில் ரிலீஸ் ஆகவிருக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றிருக்கிறது. இதுவரை சர்வதேச அளவில் நல்ல மார்க்கெட் உள்ள விஜய், அஜித் போன்றோர் படங்கள் கூட தென் கொரியாவில் வெளியானது இல்லை.

தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள முக்கிய திரையரங்குகளில் என்ஜிகே வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு மனைவியாக சாய்பல்லவியும், ராகுல் ப்ரீத்  சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.