சுர்ஜித்தின் ஆடைகளை கட்டியணைத்தபடி அவருடைய தாயார் அழுதுகொண்டிருந்த சம்பவமானது அனைவரையும் கலங்க வைத்தது.
கடைசியில் சுர்ஜித் முகத்தை கூட பார்க்கவிடாமல் அவன் தாயை தடுத்த உறவுகள்..! அதிர வைத்த காரணம்!

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 30 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை, தற்போது 100 அடி ஆழத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து 90 மணி நேரமாக மீட்புப்பணிகள் நடைபெற்றது.
தொடக்கத்தில் தன்னுடைய மகன் கிடைத்து விடுவான் என்று நம்பிக்கையுடன் இருந்தார் அவருடைய தாயார். மீனிலிருந்து பேசுவதற்கு சுர்ஜித் பதில் அளித்த விதம் அவரை மேலும் நம்பிக்கை அடைய செய்தது. ஆனால் அதன் பின்னர் நிகழ்ந்த அனைத்தும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலேயே அமைந்தது.
மேலும் இந்த சம்பவத்தை முழுவதுமாக தொலைகாட்சியில் ஊடகங்கள் நேரலை செய்து வந்தன. மகன் மீட்கப்படும் கடைசி சில நொடிகளில் நேரலை செய்ய வேண்டாம் என்று அவருடைய பெற்றோர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்டான். அப்போது அவனது ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தாயார் கதறி அழுதுள்ளார்.
மேலும் மிகவும் சிதைந்த நிலையில் இருந்த சுர்ஜித்தின் முகத்தை பார்க்க கூட அவரது தாயை உறவினர்கள் அனுமதிக்கவில்லை என்கிறார்கள். இதனை அடுத்து கதறி அழுது மயங்கிய தாயை சமாதானம் செய்துவிட்டு, பிரேதப்பரிசோதனை செய்து உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இதனிடையே எப்போதும் சுர்ஜித்தின் சிரித்த முகத்தை பார்த்து பழகிய அஅரவது தாயார், தற்போது சிதைந்த நிலையில் பார்த்தால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் தான் அப்படி செய்ததாக அவரது உறவினர்கள் கூறி வருகின்றனர்.