சற்று முன்: சுர்ஜித் 100 அடி ஆழத்திற்கு சென்றான்! இதயத்தை ஈட்டியால் பிளப்பது போன்ற தகவல்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் தற்போது 70 அடி ஆழத்தில் இருந்து 100 அடி ஆழத்திற்கு சென்று விட்டதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் இடத்தில் அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்னும் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் இரண்டு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் முதலில் 25 அடி ஆழத்தில் இருந்ததாகவும் மேலும் அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோது கைகளில் இருந்து குழந்தை நழுவி 70 அடி ஆழத்திற்கு சென்றதாகவும் கூறப்பட்டது. அதாவது குழந்தையைக் காப்பாற்றுவதற்காக மூன்று முறை கயிறை உள்ளே செலுத்தி குழந்தையை மேல் இழுக்க முயற்சி செய்தபோது குழந்தையின் கைகள் கயிறு மூலம் கட்டப்பட்டது . ஆனால் கட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் கையில் இருந்த கயிறு குழந்தையின் கையிலிருந்து  நழுவியதால் குழந்தை 25 ஆழத்திலிருந்து 70 அடி ஆழத்திற்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து பல ஹைட்ராலிக் இயந்திரங்களையும் உள்ளே செலுத்தி மீட்புக்குழுவினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . ஆனால் அவர்கள் செய்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் தற்போது 70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 100 அடிக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது . இதனை அறிந்த சுஜித் என் பெற்றோர் மற்றும் மணப்பாறை பகுதி மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.