பாயாசம்! பழச்சாறு! அந்த மாத்திரை! உத்ராவை பாம்பு கொத்தும் இரவில் நடந்த பகீர் சம்பவங்கள்!

கேரளாவில் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை விஷப் பாம்பை பயன்படுத்தி தீண்ட வைத்து கொலை செய்த கணவனை போலீசார் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது


கேரள மாநிலம் அஞ்சல் என்ற பகுதியில் வசித்து வந்தவர் உத்திரா. உத்தராவுக்கும் தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சூரஜ் என்பவருக்கும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. உத்ரா தன் கணவருடன் தாயார் வீட்டில் இருந்த பொழுது கடந்த மே மாதம் ஏழாம் தேதி பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார். இந்த வழக்கில் தினம்தோறும் ஒரு புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

பாம்பு தீண்டியதால் தான் தங்களுடைய மகள் உயிரிழந்தார் என்று உத்ராவின் இறப்பின் மீது சந்தேகம் இல்லாமல் அவரது பெற்றோர் முதலில் சாதாரணமாக இருந்து உள்ளனர். ஆனால் நாளடைவில் அவர்களுக்கு தங்களுடைய மருமகன் மீது சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது. ஏனெனில் உத்ரா, கடந்த மார்ச் மாதமும் மருமகன் சூரஜ் வீட்டில் இருக்கும்பொழுது இதே போன்று ஒரு முறை பாம்பு தீண்டியதால் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றிருக்கிறார். ஒரு கொடிய விஷப் பாம்பு ஒன்று அவரை தீண்டியமையால் மூன்று மாத காலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார் உத்ரா.

மீண்டும் அதே போல் வேறொரு கொடிய பாம்பு தற்போது உத்தரவை தீண்டி அவர் உயிரிழந்திருப்பது அவர்களுக்கு சற்று அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். தகவலறிந்த போலீசார் உத்திராவின் கணவர் சூரஜை அழைத்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையின்போது சூரஜ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.

போலீஸ் விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சூரஜ் கடந்த பிப்ரவரி மாதம் பாம்பு பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தனது நண்பர் சுரேஷ் இடமிருந்து கொடிய நாக பாம்பு ஒன்றை பெற்று வந்து தன் மனைவியை கொலை செய்வதற்காக திட்டமிட்டிருக்கிறார். அவர் திட்டமிட்டபடியே பாம்பு உத்தராவை தீண்டிய உடன் உயிருக்கு போராடி இருக்கிறார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி இருக்கிறார்.

தன்னுடைய மனைவியை கொல்ல முடியாமல் தவித்து வந்த சூரஜ், இரண்டாவது முறையாக தன்னுடைய நண்பர் சுரேஷ் இடமிருந்து வயலில் அதிகமாக எலி தொல்லை உள்ளது என்றும் அதனை பிடிக்க கொடிய விஷப்பாம்பு ஒன்று தேவை என்றும் கூறி நாக பாம்பு ஒன்றை பாட்டிலில் அடைத்து வாங்கி வந்திருக்கிறார். கொடிய நாகப்பாம்பு பின்னர் உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை தீண்ட வைத்திருக்கிறார். அவரை அந்தப் பாம்பு இரண்டுமுறை தீண்டி வாயில் நுரைதள்ளி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததனை மிக கூலாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து இருந்திருக்கிறார் சூரஜ். இதனை அவரே தன் வாயால் வாக்குமூலமாக போலீசாரிடம் அளித்திருக்கிறார்.

தன் மனைவியை பாம்பு கடித்தவுடன் அதனை தான் கொண்டு வந்த பையில் போட்டு எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறார் சூரஜ். ஆனால் அவர் பையில் பாம்பை பிடித்து போடுவதற்கு முன்பாக அது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அதனால் அன்றைய தினம் இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டு கட்டிலை விட்டு கீழே இறங்காமல் பயத்தோடு நடுங்கி கொண்டிருந்திருக்கிறார் சூரஜ். மறுநாள் காலை அனைவரையும் போலவே இருந்திருக்கிறார். அந்நேரத்தில் உத்ராவின் தாயார் தனது மகளை எழுப்பி பார்த்திருக்கிறார். அப்போது அவர் வாயில் நுரைதள்ளி உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து சூரஜ் ஒன்றுமே தெரியாத மாதிரி தன் மனைவி பாம்பு தீண்டி தான் உயிரிழந்துவிட்டார் என்று நாடகமாடி இருக்கிறார்.

சூரஜ் எதற்காக தன் மனைவியை கொலை செய்தார் என்று போலீசார் கேள்வி எழுப்பினர். அதாவது தன் மனைவி உத்திராவை கொலை செய்துவிட்டு அவரிடம் இருக்கும் பணம் மற்றும் நகையை பயன்படுத்தி வேறு ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று சூரஜ் எண்ணியிருக்கிறார். ஆகையால் தான் தன் மனைவியை ஈவிரக்கமின்றி பாம்பை வைத்து கொலை செய்திருக்கிறார். இதனை அறிந்த போலீசார் சூரஜ் மற்றும் அவருக்கு பாம்பு அளித்து உதவி செய்த சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீசாருக்கு வரும் சனிக்கிழமை வரை சூரஜ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து தினம் தோறும் புதிய புதிய தகவல்கள் விசாரணையின்போது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

முதலில் போலீசார் பாம்பு கடித்த பொழுது உத்தரா ஏன் சத்தம் போடவில்லை என்று அவளிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதற்கு சூரஜ் முதல் முறை என் மனைவியை பாம்பு கடித்த பொழுது அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள். ஆகையால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றி விட்டனர். இதேபோல் இரண்டாவது முறையும் நடைபெறக் கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டிற்கு செல்லும் பொழுது தூக்க மாத்திரையை வாங்கிச் சென்றேன். தூக்க மாத்திரைகளை உத்ரா குடிக்கும் பழச்சாறு மற்றும் பால்பாயாசம் ஆகியவற்றில் கலந்து கொடுத்தேன். இதனை உண்ட உத்ரா மயக்க நிலையில் இருந்தாள். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்து என்னுடைய பாட்டிலில் இருந்த பாம்பு மூலம் உத்தராவை கடிக்க வைத்தேன். பாம்பில் இருந்து வெளியேறிய கொடிய விஷமானது உடலில் பரவி அவளது உயிரையும் பறித்து எடுத்தது என்று சூரஜ் தனது வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். இதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.