படுக்கையில் உறங்கிய மனைவியை 2 முறை பாம்பு கொத்தியது..! அருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்..! உத்ரா கணவன் கொடுத்த சில்லிட வைக்கும் வாக்குமூலம்!

கேரளாவில் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை விஷப் பாம்பை பயன்படுத்தி தீண்ட வைத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.


கேரள மாநிலம் அஞ்சல் என்ற பகுதியில் வசித்து வரும் வந்தவர் உத்திரா. உத்தராவுக்கும் தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சூரஜ் என்பவருக்கும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. உத்ரா தன் கணவருடன் தாயார் வீட்டில் இருந்த பொழுது கடந்த மே மாதம் ஏழாம் தேதி பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார்.

பாம்பு தீண்டியதால் தான் தங்களுடைய மகள் உயிரிழந்தார் என்று உத்ராவின் இறப்பின் மீது சந்தேகம் இல்லாமல் அவரது பெற்றோர் முதலில் சாதாரணமாக இருந்து உள்ளனர். ஆனால் நாளடைவில் அவர்களுக்கு தங்களுடைய மருமகன் மீது சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது. ஏனெனில் உத்ரா, கடந்த மார்ச் மாதமும் மருமகன் சூரஜ் வீட்டில் இருக்கும்பொழுது இதே போன்று ஒரு முறை பாம்பு தீண்டியதால் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றிருக்கிறார். ஒரு கொடிய விஷப் பாம்பு ஒன்று அவரை தீண்டாமையால் மூன்று மாத காலங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார் உத்ரா.

மீண்டும் அதே போல் வேறொரு கொடிய பாம்பு தற்போது உத்தரவை தீண்டி அவர் உயிரிழந்திருப்பது அவர்களுக்கு சற்று அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். தகவலறிந்த போலீசார் உத்திராவின் கணவர் சூரஜை அழைத்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையின்போது சூரஜ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.

போலீஸ் விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சூரஜ் கடந்த பிப்ரவரி மாதம் பாம்பு பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தனது நண்பர் சுரேஷ் இடமிருந்து கொடிய பாம்பு ஒன்றை பெற்று வந்து தன் மனைவியை கொலை செய்வதற்காக திட்டமிட்டிருக்கிறார். அவர் திட்டமிட்டபடியே பாம்பு உத்தராறவை தீண்டிய உடன் உயிருக்கு போராடி இருக்கிறார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி இருக்கிறார்.

தன்னுடைய மனைவியை கொல்ல முடியாமல் தவித்து வந்த சூரஜ், இரண்டாவது முறையாக தன்னுடைய நண்பர் சுரேஷ் இடமிருந்து கொடிய நாகப்பாம்பு ஒன்று பெற்று வந்து உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை தீண்ட வைத்திருக்கிறார். அவரை அந்தப் பாம்பு இரண்டுமுறை தீண்டி வாயில் நுரைதள்ளி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அதனை மிக கூலாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து இருந்திருக்கிறார் சூரஜ். இதனை அவரே தன் வாயால் வாக்குமூலமாக போலீசாரிடம் அளித்திருக்கிறார்.

தன் மனைவியை பாம்பு கடித்தவுடன் அதனை தான் கொண்டு வந்த பையில் போட்டு எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறார் சூரஜ். ஆனால் அவர் பையில் பாம்பை பிடித்து போடுவதற்கு முன்பாக அது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ஆனால் அன்றைய தினம் இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டு கட்டிலை விட்டு கீழே இறங்காமல் பயத்தோடு நடுங்கி கொண்டிருந்திருக்கிறார் சூரஜ். மறுநாள் காலை அனைவரையும் போலவே ஒன்றுமே தெரியாத மாதிரி தன் மனைவி பாம்பு தீண்டி தான் உயிரிழந்துவிட்டார் என்று நாடகமாடி இருக்கிறார்.

சூரஜ் எதற்காக தன் மனைவியை கொலை செய்தார் என்று போலீசார் கேள்வி எழுப்பினர். அதாவது தன் மனைவி உத்திராவை கொலை செய்துவிட்டு அவரிடம் இருக்கும் பணம் மற்றும் நகையை பயன்படுத்தி வேறு ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று சூரஜ் எண்ணியிருக்கிறார். ஆகையால் தான் தன் மனைவியை ஈவிரக்கமின்றி பாம்பை வைத்து கொலை செய்திருக்கிறார். இதனை அறிந்த போலீசார் சூரஜ் மற்றும் அவருக்கு பாம்பு அளித்து உதவி செய்த சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.