செக்ஸ் புகார்! மிகப் பெரிய இடத்துடன் மோதும் பாடகி சின்மயி! குவியும் பாராட்டு!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் என்பவராவார். இவர் மீது நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒரு பெண் புகார் அளித்திருப்பது அனைவரையும் கதிகலங்க செய்துள்ளது.


இந்நிலையில் அவர் மீதுள்ள குற்றம் நிருபிக்கபடாததால் அவர் அந்த வழக்கில் இருந்து விடுபட்டார். இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தமிழ்நாட்டு பாடகி சின்மயி வலியுறுத்தியுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் நல அமைப்பில் சின்மயி உறுப்பினராக உள்ளார். இவர் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முழுவதுமாக ஆராய படவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் எந்நிலையில் இருந்தாலும் அதனை நன்கு ஆராய்ந்த பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பெண்கள் சார்ந்த சமூக விழிப்புணர்வு சங்கங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஞ்சன் கோகாய் மீதான புகார் அவசர கதியில் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார்.

எனவே முழுமையாக விசாரிக்க வலியுறுத்தி சென்னையில் தான் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்மயி மனு அளித்துள்ளார். இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு எதிராகவே போராட்டம் நடத்த அனுமதி கோரியிருக்கும் சின்மயிக்கு உண்மையிலேயே செம தில் தான்.