கோவையில் பள்ளி குழந்தைகள் 2 பேர் கடத்தி கொலை! 9 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிக்கு தூக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி!

கோவையில் பள்ளி குழந்தைகள் 2 பேரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை மாவட்டத்தில் காத்தான்செட்டி பகுதியில் ஜவுளிக்கடை அதிபர் வசித்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 11 வயதில் மகளும் 8 வயதில் மகனும் உள்ளனர். 

காந்திபுரத்தில் உள்ள பள்ளியில் பெண் குழந்தை 5-ம் வகுப்பிலும், ஆண் குழந்தை 3- ம் வகுப்பிலும் படித்து வந்தனர். 2010-ஆம் ஆண்டில் அக்டோபர் 29-ஆம் தேதியன்று இருவரும் கடத்தப்பட்டனர். பொள்ளாச்சி அருகேயுள்ள வாய்க்காலில் இருவரும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர்.

பிரேத பரிசோதனையில் பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்துள்ளது. விசாரித்த காவல்துறையினர் கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜையும், அவருடைய நண்பர் மனோகரனையும் கைது செய்தனர்.

மோகன்ராஜை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டு தள்ளினர். ஆனால் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம்  2012-ஆம் ஆண்டில் மனோகரனுக்கு மரண தண்டனையும் 3 ஆயுள் தண்டனையும் தீர்ப்பில் வழங்கினர்.

இதனை எதிர்த்து மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அங்கும் மகிளா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.மனோகரன் இந்த தீர்ப்பையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் மகிளா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வழங்கினர். தீர்ப்பைக்கேட்ட கோவை பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.