ஆண் துணை வேண்டும் என்பதால் அவரை சேர்த்துக் கொண்டேன்! ஆனால் அவருக்கு 2 மனைவிகள்! தமிழ் நடிகை வெளியிட்ட சீக்ரெட்!

2-வது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக பிரபல துணை நடிகை புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருவான்மியூர் அருகேயுள்ள ஷெனாய் நகர் பகுதியில் பிரபல நடிகை ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் 20-ஆம் தேதியன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் குற்றங்களை தடுக்கும் பிரிவில் ஒரு திடுக்கிடும் புகார் மனுவை கொடுத்தார்.

அதில், "என்னுடைய சொந்த ஊர் திருச்சி. நான் திருச்சியிலிருந்து சென்னைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்தேன். எனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த பிள்ளை மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் பள்ளியில் படித்து வருகிறான். ஆனால் என் கணவருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவரை பிரிந்தேன்.

அதன்பின்னர் சென்னைக்கு தன்னந்தனியாக குழந்தைகளை அழைத்து கொண்டு வந்தேன். என்னுடைய பெற்றோரின் சொத்துக்களை பிரித்ததில், எனக்கு 25 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதை வைத்து அழகு நிலையம் நடத்தி வந்தேன். பின்னர் சிறு சிறு வேடங்களில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்தேன். இதனால் வருமானத்திற்கு குறைவு என்று என்னுடைய குழந்தைகளை நன்றாக வளர்த்து வந்தேன்.

மான்கராத்தே படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து வந்தபோது, சரவணன் சுப்பிரமணி (42) என்பவர் என்னுடன் நடித்தார். அதன் பின்னர் நாங்கள் இருவரும் உரையாடி கொள்ள தொடங்கினோம். அவர் எண்ணி வீட்டிற்கு அருகே அவ்வப்போது வருவது போன்று காட்டிக்கொண்டார்.

சில மாதங்கள் கழித்து என்னை விரும்புவதாகவும், என்னுடைய குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்வதாகவும் கூறினார். எனக்கும் ஒரு ஆண் துணை வேண்டும் என்பதற்காக அவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு என்னை வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனால் என்னுடைய சம்பாத்தியம் குறைய தொடங்கியது.

பின்னர் திடீரென்று ஒருநாள் என்னையும், என்னுடைய குழந்தைகளையும் கொடைக்கானலில் உள்ள ஒரு பங்களாவிற்கு அழைத்து சென்றார். அங்குதான் அவருடைய உண்மையான சுயரூபத்தை புரிந்து கொண்டேன். 3 நண்பர்களுக்கு முன்னிலையில் என்னை ஆபாசமாக நடனமாட உத்தரவிட்டார். இதனால் நானும், என்னுடைய குழந்தைகளும் பேரதிர்ச்சி அடைந்தோம்.

எங்களை விட்டு விடுமாறு எவ்வளவோ முறை கெஞ்சினோம். ஆனால் அவர் கேட்கவில்லை. ஒருவழியாக நாங்களே எங்களை விடுவித்துக்கொண்டு பங்களாவிலிருந்து தப்பினோம். அதன் பின்னர் என்னுடைய வீட்டை மாற்றி வேறு ஒரு வீட்டிற்கு சென்றேன். அப்போது அவருடைய ஒரு நண்பர் என்னுடைய வீட்டை கண்டுபிடித்து அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மிரட்டினார். மிரட்டலுக்கு பயந்து கொண்டு நான் சேர்ந்து வாழ தொடங்கினேன்.

அப்போதுதான் அவருக்கு ஏற்கனவே ஒரு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்து கொண்டேன். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, தன்னுடைய விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது என்று கூறி என்னை ஏமாற்றினார். ஒரு சில வாரங்கள் கழித்து அவர் தன்னுடைய முதல் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வருவதை நான் அறிந்து கொண்டேன். 

கிட்டத்தட்ட பத்து வீடுகளை மாற்றி அவரிடம் தப்பிப்பதற்கு முயற்சி செய்தேன். என் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருவதை கவனித்து விட்டு, என்னுடைய வீட்டை எளிதில் கண்டுபிடித்து விடுவார். மேலும் நான் அவரை விட்டு ஒதுங்கி சென்றால், அவர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். திடீரென்று ஒருநாள் அவருடைய முதல் மனைவி என்னிடம் வந்து கொலை மிரட்டல் விடுத்தார்.

இதன்பிறகு சரவணன் என்னுடைய ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். இத்தகைய சம்பவங்களினால் நானும் என்னுடைய குழந்தைகளும் பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு சரவணனும், அவருடைய சுற்றுவட்டாரமுமே காரணமாகும். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவமானது செனாய் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.