திருநங்கைகள்..! நடிகர் ரஜினிகாந்துக்கு வந்த திடீர் ஆசை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திருநங்கையாக திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை என்று தர்பார் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கூறியிருக்கிறார்.


தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் ஆவார். கடந்த 45 ஆண்டு காலமாக திரைத்துறையின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 160 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது நடிப்பில் தர்பார் என்ற புதிய திரைப்படம் உருவாகி இருக்கிறது திரைப்படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 27 ஆண்டுகளுக்கு பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக இந்த தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், இதுவரை தான் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து உள்ளதாகவும் இருப்பினும் ஒரு கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்காததைப் பற்றி வருந்துவதாகும் கூறினார். மேலும் தனக்கு திருநங்கையாக ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

ஒருவேளை திருநங்கையாக நடிக்கும் வாய்ப்பை தான் பெற்றால் அது சந்தோஷமாக ஏற்று நடிக்க தயாராக இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறாக பேசிய வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.