என்னை இயக்குவது ஆன்மீகமே! 24 வருடங்களுக்குப் பிறகு தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் ரஜினி பரபரப்பு!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் சுமார் 24 ஆண்டுகள் கழித்து தூர்தர்ஷன் சேனலுக்கு பேட்டி அளித்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 6 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் நாள் தனது பிறந்த நாளன்று கடைசியாக தூர்தர்ஷன் சேனலுக்கு பேட்டி அளித்தார். தற்போது பேட்டி அளித்து 24 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் அதே சேனலுக்கு பேட்டி அளித்துள்ள சம்பவம் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது அதனைத்தொடர்ந்து டிடி சேனலுக்கு நடிகர் ரஜினிகாந்த். 

சமீப காலமாகவே அரசியலைப் பற்றி பேசிவரும் நடிகர் ரஜினிகாந்த் இந்த நேர்காணலில் அரசியலைப் பற்றி சிறிது கூட வாயை திறக்கவில்லை. 

மேலும் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம் தொகுப்பாளர், தொழில்வாழ்க்கையில் உங்களை இயக்குவது எது என்று கேள்வி எழுப்பினார். தொழில் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, என் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே ஆன்மீகம் தான் இயக்கி வருகிறது என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி நேற்று இரவு 9 மணி அளவில் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.