காவிச் சாயம் பூசப் பார்க்கிறார்கள்! பாஜகவிடம் ஒரு போதும் சிக்கமாட்டேன்! தெறிக்கவிட்ட ரஜினி!

எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடைபெறுகிறது . நானும் மாட்ட மாட்டேன் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன்பாக செய்தியாளர்களை சந்தித்திருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி ஆடை அணிவித்தது குறித்து பேசினார் . பாஜக அலுவலகத்தில் இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு காவி ஆடை அணிவித்தது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் அதனைப் பற்றி கருத்து தெரிவித்த எனக்கு எதுவும் இல்லை என்று கூறினார். 

அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் தான் அவர்களால் காவி ஆடை அணிவிக்க இயலும். உலகில் உள்ள மற்ற திருவள்ளுவர் சிலை களுக்கெல்லாம் அவர்களால் காவி ஆடை அணிவிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் பேசிய அவர் இந்த திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது சரியல்ல எனவும் கூறினார். 

மேலும் பேசிய அவர் இடம் செய்தியாளர் ஒருவர் பொன் ராதாகிருஷ்ணன் உங்களை அடிக்கடி வந்து பாஜகவில் சேருவதற்காக அழைப்பு விடுத்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது அது உண்மையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் என்னை வந்து அழைக்கவும் இல்லை நான் அவரிடம் பேசவில்லை என்று கூறினார் . பின்னர் ரஜினி வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் எவரும் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். 

கடைசியாக பேசும்பொழுது திருவள்ளுவருக்கு காவி சாயத்தை பூசியது போல எனக்கும் காவி சாயம் பூச வேண்டும் என்று தொடர்ச்சியாக செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது . ஆனால் நானும் மாட்ட மாட்டேன் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார் என்று கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதன் மூலம் ஒருபோதும் பாஜகவிடம் சிக்க மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.