பேட்ட படத்தின் முதல் நாள் கலெக்சன் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் முதல் நாள் கலெக்சனை வீழ்த்தியுள்ளது.
பர்ஸ்ட் டே கலெக்சன்! விஸ்வாசத்தை வீழ்த்தியது சூப்பர் ஸ்டாரின் பேட்ட!

சூப்பர் ஸ்டார் ரஜினி
நடித்து கார்த்தி சுப்பராஜ் தயாரித்த பேட்ட திரைப்படம் நேற்று உலகம் முழுவதும்
வெளியானது. இதே நாளில் அஜித் நடிப்பில் சிவாஇயக்கிய விஸ்வாசம் படமும் வெளியானது.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள ஆயிரம் திரையரங்குகளில் தலா 500
திரையரங்குகளில் பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியானது. நேற்று முதல் நாள் என்பதால்
இரண்டு பேருக்குமே அதிக ரசிகர்கள் என்பதால் வெளியான அத்தனை திரையரங்குகளும் அத்தனை
காட்சிகளும் ஹவுஸ்புல்லானது.
சென்னையில் மட்டும் பேட்ட
திரைப்படம் நேற்று சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதே போல்
விஸ்வாசம் திரைப்படமும் சென்னையில் ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்துள்ளது.
ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் பேட்ட படத்தின் வசூல் சுமார் பதினேழரை கோடியாக
இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் விஸ்வாசம் படமும் தமிழகத்தில்
பதினேழரை கோடி ரூபாயை நேற்று ஒரே நாளில் வசூலித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரஜினி மற்றும் அஜித்தின்
படங்கள் சரி சமமாக தலா 500 திரையரங்குகளில் திரையிடப்பட்டதால் தமிழகத்தை
பொறுத்தவரை இருவரின் படங்களின் வசூல் அளவும் ஒரே அளவில் இருந்துள்ளது. ஆனால் மற்ற
மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ரஜினியின் பேட்ட திரைப்படம் விஸ்வாசத்தை
ஒப்பிடும் போது மிக அதிகமாக வெளியிடப்பட்டிருந்தது. மேலும் வெளிநாடுகளில்
ரஜினிக்கு இருக்கும் வரவேற்பு அஜித்திற்கு கிடையாது.
எனவே உலக பாக்ஸ் ஆபிசை
பார்க்கும் போது ரஜினியின் பேட்ட திரைப்படம் முதல் நாளில் வசூலில் அஜித்தின்
விஸ்வாசத்தை காலி செய்துள்ளது. ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் பேட்ட திரைப்படம்
சுமார் 25 கோடி ரூபாய் முதல் 30 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கும் என்று திரையுலக
வர்த்தகர்கள் கூறுகிறார்கள். அதே சமயம் சர்வதேச வசூல் நிலவரத்தையும் சேர்த்து
விஸ்வாசம் திரைப்படம் முதல் நாளில் 21 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் என்று
கணக்கிடப்பட்டுள்ளது.
எத எப்படியோ இரண்டு
படங்களுமே ஒரே நாளில் வெளியானாலும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸ் மூலம் எப்போதுமே தான்
தான் வசூல் மன்னன் என்பதை ரஜினி மீண்டும் நிரூபித்துள்ளார். அதே சமயம் அஜித்
நடிகர் ரஜினிக்கு கடுமையான போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.