சிறுத்தை சிவா டைரக்ஷனில் தலைவர் 168! சன் பிக்சர்ஸ் அதிரடி சரவெடி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படம் பற்றின அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதற்கு முன்பாக நடித்திருந்த எந்திரன் , பேட்ட போன்ற திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதே போல் மூன்றாவது முறையாக ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த திரைப்படமானது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168 ஆவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கப்போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து உருவாக்க உள்ள  இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியுள்ளது .

தற்போது இந்த படத்தை  பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.