ரஜினிக்கு மட்டும் தான் சிவப்புக் கம்பளம்! விஜய் - அஜித்துக்கு இல்ல! எங்கனு தெரியுமா?

டி எஸ் ஆர் விருது வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.


ஆந்திராவில் மிகப் புகழ்பெற்ற சினிமா தயாரிப்பாளர் டி. சுப்பிரமணி ரெட்டி. அம்மாநிலத்தில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் உள்ள இவர், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய தலைவராகவும் இருக்கிறார். இவரது புகழைப் போற்றும் வகையில் டி எஸ் ஆர் தேசிய சினிமா விருதுகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.

 

   இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரமான வித்யாபாலன் கௌரவிக்கப்படவுள்ளார். அவருக்கு மறைந்த முன்னாள் உச்ச நட்சத்திரமான ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விருது வழங்கப்படுகிறது. டி சுப்பிரமணி ரெட்டி கையால் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

   இந்த விழாவில் டோலிவுட் திரையுலகின் முன்னணி உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த செய்தி அம்மாநில சினிமா ரசிகர்களுக்கு தித்திப்பை கூட்டி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு இனிமையான செய்தி வெளியாகியுள்ளது. 

 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்தபடி ரசிகர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். இதுமட்டுமல்லாமல் கோலிவுட்டின் பிரபல நடிகர்களான சூர்யா விக்ரம் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

 

   டோலிவுட்டின் நான்கு தூண்கள் என கருதப்படும் இந்த நடிகர்களுடன் ரஜினிகாந்த் இணைவது ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க விட்டு உள்ளது. விழா அன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிக்கு மட்டுமே முதலில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


   அதன் பிறகு விக்ரம், சூர்யா ஆகியோர் தாமதமாகவே அழைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் தமிழ் திரையுலகில் முன்னணியில் உள்ள அஜித், விஜய் போன்றோருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.