கொரோனாவை சத்தம் இல்லாமல் நாடு முழுவதும் பரப்பும் சூப்பர் ஸ்ப்ரட்டர்ஸ்..! கதிகலங்க வைக்கும் ரிப்போர்ட்..!

கொரோனா வைரஸ் பாதிப்படைந்திருப்பினும் அறிகுறிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் அதிகளவில் வெளியே உலாவுவதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 14,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 3,35,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனிடையே இந்த நோய் தாக்குதலின் தொடக்கத்தில் எந்தவித பாதிப்புமின்றி மக்கள் இயல்பாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று சமூகத்தில் உலாவிவருகின்றனர். அதன்மூலம் அவர்கள் பிறருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு தொற்றாக செயல்படுகின்றனர். இவர்களை "சூப்பர் ஸ்ப்ரெடர்" என்று மருத்துவ உலகில் அழைக்கின்றனர்.

வெளிநாட்டிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாண் நகருக்கு வந்த இளைஞர் ஒருவர் தனக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறியாமல் கிட்டத்தட்ட 1,000 பேருடன் பழகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் வேலை நிமித்தமாகவும் சிலபல நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதேபோன்று இத்தாலியில் இருந்து டெல்லி வந்த இளைஞர் ஒருவர் வேலை நிமித்தமாக பலருடனும் ரயிலில் சென்று வந்துள்ளார். அவர் கிட்டத்தட்ட 813 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்கள் தங்களுக்கு நோய் அறிகுறி இல்லை என்பதால் சமூகத்தில் உலா வருகின்றனர். அதன்மூலம் தங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பை அவர்கள் உணர தவறுகின்றனர்.

இத்தகைய "சூப்பர் ஸ்ப்ரெடர்" இந்தியாவில் அதிக அளவில் இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த செய்தியானது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளன.