சூப்பர் சிங்கர் செந்தில் - ராஜலட்சுமி ஜோடிக்கு அடித்த அடுத்த அதிர்ஷ்டம்.! தீயாய் பரவும் புகைப்படத்தின் பின்னணி!

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலட்சுமி‌ ஜோடிக்கு ஒருசேர விருது வழங்கப்பட்டிருக்கும் சம்பவமானது ரசிகர்களை நெகிழ செய்துள்ளது.


2 வருடங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த காதல் ஜோடி செந்தில்கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இருவரும் கணவன் மனைவியாவர். நாட்டுப்புற பாடல்களை தாங்களே எழுதி, அதனை மேடையில் பாடும் வல்லமை படைத்தவர்களாக திகழ்ந்தனர்.

மேடையில் இருவரும் எதிர் எதிர் அணியில் இருந்துகொண்டு பாட்டின் மூலம் தங்களுடைய திறமைகளை உலகிற்கு பறைசாற்றினர். இதன் மூலம் இவர்களுடைய புகழ் எட்டுதிக்கும் பரவ தொடங்கியது. அடுத்தடுத்து சினிமா படங்களில் பாடுவதற்கும் இருவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒருசேர பாடி வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிஹைண்ட்வுட்ஸ் என்ற ஊடகம் இருவருக்கும் ஒரே விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இவர்களுடைய பாட்டு திறமைக்கும் மட்டுமின்றி, இவர்களுடைய காதலை போற்றும் வகையிலும் இவருக்கும் ஒரே விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ‌

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை இருவரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர்.